• JUST IN | சுட சுட

ஆம்புலன்ஸ் கிடைக்காததால், இறந்த தாயின் உடலை பைக்கில் கொண்டு சென்ற மகன்!





ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வராததால் இறந்த தாயின் உடலை அவரது மகன் 20 கிமீ தூரத்திற்கு பைக்கில் வைத்து கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு வருவதற்குள் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்த அந்த பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பெண்ணின் மகனும், மருமகனும் தவித்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் என்பதால், ஒரு ஆம்புலன்ஸும் வரவில்லை.

இதையடுத்து அப்பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில் அப்பெண்ணின் சடலத்தை நடுவில் உட்காரவைத்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிகொண்டு சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Comments

M.Kothandapani says :

தோளிலும் மார்பிலும் தாங்கிய தாயை தங்களது முதுகிலும் மார்பிலும் சாய்த்துத் தாங்கிச் சென்ற அந்த மகன்கள் புண்ணியம் செய்தவர்கள்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :