• TRENDING | பர பர

நடராஜனுக்கு இன்று முழங்கால் அறுவை சிகிச்சை!





இந்திய கிரிக்கெட் அணியில் மிகக்குறுகிய காலத்தில் அனைவராலும் அறியப்பட்டவர் நடராஜன். தனது யார்க்கர் பவுலிங்கால் உலகப் புகழ்பெற்ற நடராஜனுக்கு இன்று முழங்கால் அறுவை சிகிச்சை நடந்தது. இச்செய்தியை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து டிவிட்டரில் அவர் பகிர்ந்தவை:

எனக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் நான் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ மற்றும் அனைவருக்கும் நன்றி.

-இவ்வாறு நடராஜன் தெரிவித்துள்ளார்.

Comments

s.kumarselvam says :

சீக்கிரம் குணமடைந்து இந்திய அணியினருடன் விளையாட வாழ்த்துகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :