• TRENDING | பர பர

இந்தியாவுக்காக அரங்கேறிய #stay strong India! வைரல் வீடியோ!





இந்தியா கொரோனாவிலிருந்து மீண்டு வரவேண்டுமென, துபாய் அரசு செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதோடு, அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பரவல் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், துபாய் அரசு, இந்திய மக்கள், கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என எண்ணி, எடுத்துள்ள புது முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

துபாய் நாட்டின் முக்கிய நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் போன்றவற்றை வெளிக்காட்டும் வகையில், அந்நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக கருதப்படும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில், தற்போது இந்தியாவின் மூவர்ணக் கொடியை விளக்குகள் மூலம் வெளிப்படுத்தி #stay strong India என்ற காட்சியினை வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு.

இந்தியாவில், கொரோனாவின் 2-ம் அலை அதிகரித்து வரும் வேளையில், இந்தியா விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற கருத்துடன் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள இந்த காட்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருவதோடு, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

twitter link : : https://twitter.com/IndembAbuDhabi/status/1386371038313947138

Comments

M.Kothandapani says :

துபாய் நாட்டவர்க்கு நம் மீது இருக்கும் அக்கறை கூட நம் நாட்டு சக மக்களிடம் ஒருவருகொருவர் இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :