• JUST IN | சுட சுட

ஹாலிவுட் படம்: ‘தி கிரேமேன்’ படக்குழுவினருடன் தனுஷ்!





அமெரிக்காவில் ஹாலிவுட் பட படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவு செய்து மிரட்சி ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டைக் கலக்கி, இப்போது ஹாலிவுட்டில் கால்பதித்துளார் த்னுஷ். முன்னதாக ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழி கலவையில் உருவான ஒரு படத்தில்- நடித்திருந்தார் தனுஷ். அந்த படத்தின் வாயிலாகவே தற்போது அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரசோ சகோதரர்கள் இயக்கும் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு மிகவும் வலுவான வேடம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும் நடிகர் தனுஷ் நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து எடுத்த சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவை இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Comments

Manikandan says :

தனுஷ் மிகவும் இயல்பாக நடிக்கக்கூடியவர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :