• JUST IN | சுட சுட

இந்திய கார் சந்தையில் நுழைந்தது டெஸ்லா: மும்பையில் முதல் ஷோரூம்!





மின்சார கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெஸ்லா, இந்தியாவில் மும்பையில் தன் முதல் ஷோரூமை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனம் உலகளவில் மின்சார கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கார் தொழிற்சாலையைத் தொடங்கியுள்ள அந்த நிறுவனம், இந்தியாவில் கால் பதிக்க ஆர்வம் காட்டியது. அதற்காக பூர்வாங்கப் பணிகளை தொடங்கிய டெஸ்லா, பெங்களூருவில் தலைமையகத்தை அமைப்பதாக அறிவித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்தார்.

பெங்களுரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் கார் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்களை அந்நிறுவனம் திறக்க உள்ளது. பெங்களுருவில் தலைமையகத்தை அமைத்தாலும் முதல் கார் தயாரிப்பு ஷோரூம் மற்றும் ஆபிஸை மும்பை பரேல் -வோர்லி பகுதியில் டெஸ்லா நிறுவனம் தொடங்க உள்ளது.

டெஸ்லா இந்திய கார் சந்தையில் மிக வேகமாக கால்பதிக்க காரணம், இந்திய அரசு மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகளவில் ஊக்குவித்து வருவதும், இந்நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதும்தான்!.

இந்தியாவில் கால் பதிக்கும் டெஸ்லா, முதன்முதலான செடான் 3 ரகக் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :