• JUST IN | சுட சுட

கொரோனா பணியில் மத்திய அமைச்சர் மகள்!





மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை இணைஅமைச்சரான மன்சுக் மாண்டவியாவின் மகள் திஷா கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு செயலாற்றுவதற்கு பாராட்டுகள் குவிகின்றன.

இந்தியாவில் வேகமெடுத்துள்ள கொரோனா 2-ம் அலை கட்டுப்படுத்த முடியாத அளவில் தலைநகர் டெல்லியில் தாக்கி வருகிறது. நாட்டில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இதனால், மருத்துவமனைகளில் சிகிக்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் மகள் திஷா சமீபத்தில் மருத்துவப் படிப்பை முடித்து டாக்டரானார். இப்போது கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளின் புகைப்படத்தை தன் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு அவரை நினைத்துப் தான் பெருமைப்படுவதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது:

என் மகள் திஷாவை இந்த டாக்டர் பணியில் பார்க்க எவ்வளவு நாட்களாக ஆவலுடன் காத்திருந்தேன்! இப்போது கனவு நிஜமாகியிருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் நீங்கள் ஒரு பயிற்சி டாக்டராக சிறப்பாக உங்கள் கடமையைச் செய்கிறீர்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். தேசத்திற்கு உங்கள் சேவை தேவை, நீங்கள் உங்களை நிரூபிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

-இவ்வாறு தன மகள் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு தன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

twitter link : : https://twitter.com/mansukhmandviya/status/1386609936122089473

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :