• JUST IN | சுட சுட

கொரோனா பாதிக்கப்பட்ட மணமகன், பிபிஇ உடையுடன் நடைபெற்ற திருமணம்!





மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் நிச்சயமான நிலையில் மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மணமக்கள் இருவரும் பிபிஇ உடையணிந்து திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் வசித்து வரக்கூடிய ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் பின்னர் மணமகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், திருமணத்தை நிறுத்தி விட வோ, திருமணத் தேதியை தள்ளிப் போடவோ இருதரப்பிலும் விரும்பவில்லை. இதையடுத்து, மணமக்கள் இருவரும் பாதுகாப்பாக பிபிஇ உடையணிந்து இன்று திருமணம் செய்துள்ளனர்.

பிபிஇ உடையுடன் மணமகன் மற்றும் மணமகள் அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொள்ளும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

Comments

கதிர் says :

திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

M.Kothandapani says :

எங்க ஊரில் ஆணுக்கு பின்னாடிதான் பெண் வருவார். உங்க ஊரில் பெண்ணுக்கு பின்னாடிதான் ஆண் வருவாரா? ஒருவேளை மாப்பிள்ளைக்கு நோய் பாதிப்பு அதிகமோ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :