• SPARKLES | மினுமினு

குதிரை முகமும் மனித உடலும் கொண்ட கடவுள் யார்? ஆன்மிக புதிர்ப் பயணம்-1


- ஜி.எஸ்.எஸ்.

ஆன்மீகத்தில் அரிய தகவல்களை சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்லும் விளையாட்டு இது! வாருங்கள் புதிருக்குள் பயணிப்போம்..

1. கற்பக விநாயகர் அருள்புரியும் பிரபல ஆலயம் எங்கு உள்ளது?

உங்கள் பதில் சேண்பாக்கம் என்றால், 6-ம் கேள்விக்குச் செல்லுங்கள். பிள்ளையார்பட்டி என்றால் 10-ம் கேள்விக்குச் செல்லவும்.

2. மற்போர் என்பது சரியான விடை அல்ல. பதில் குறித்த தெளிவு கிடைக்க 15-ம் கேள்விக்குச் செல்லுங்கள்.

3. பக்தன் நந்தன் தன்னை தரிசிப்பதற்காக நந்தியை விலகச் சொன்னார் சிவபெருமான். இந்த அற்புத சம்பவம் நடைபெற்ற தலம் எது?

திருச்சி என்பவர்கள் 13-ம் கேள்விக்கும், திருப்புங்கூர் என்பவர்கள் 8-ம் கேள்விக்கும், சிதம்பரம் என்பவர்கள் 5-ம் கேள்விக்கும் செல்லுங்கள்.

4. மயில் என்றவுடன் முருகப்பெருமானை நினைத்து விட்டீர்களா?

இக்கேள்விக்கான சரியான விடை அறிய 11-ம் கேள்வியைப் படியுங்கள்.

5. இது தவறான விடை. சரியான விளக்கம் 8-ம் கேள்வியில் உள்ளது.

6. தவறு. வேலூரின் அருகே உள்ள சேண்பாக்கத்தில் அருள்புரியும் சுயம்பு விநாயகரின் பெயர் செல்வ விநாயகர். எனவே, கேள்விக்கான சரியான விடை அறிய 10-ம் கேள்விக்குச் செல்லுங்கள்.

7. ஹயக்ரீவர் எதற்கு அதிபதியாகக் கருதப்படுகிறார்?

ஆரோக்கியம் என்றால் 12-ம் கேள்விக்கும்,

கல்வி என்றால் 15-ம் கேள்விக்கும்,

மற்போர் என்றால் 2-ம் கேள்விக்கும் செல்லுங்கள்.

8. சரியாகச் சொன்னீர்கள். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகே உள்ள திருப்புங்கூரில் உள்ள சிவலோகநாதர் ஆலயத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. அடுத்து நீங்கள் செல்லவேண்டியது 14-ம் கேள்விக்கு.

9. மன்மதன் அழகன்தான். ஆனால், கேள்விக்கான விடை இது அல்ல. சரியான விடையை அறிய 11-ம் கேள்வியைப் படியுங்கள்.

10. ஆம். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டியில் அருள் புரிபவர்தான் கற்பக விநாயகர். இப்போது 3-வது கேள்விக்கு விடை அளியுங்கள்.

11. சரியாகச் சொன்னீர்கள். இது கண்ணனைப் பற்றிய பாடல்தான். இதை எழுதியவர் ஊத்துக்காடு வேங்கட சுப்ரமணியர் என்பது கூடுதல் தகவல். இப்போது நீங்கள் 7-வது கேள்விக்குச் செல்லலாமே.

12. தவறு. ஆரோக்கியம், மருத்துவம் போன்றவற்றுக்கு அதிபதி தன்வந்த்ரி ஆவார். எனவே, விடை அறிய 15-ம் கேள்வியை நோக்கி நடைபோடுங்கள்.

13. இது தவறான விடை. சரியான விடை அறிய 8-ம் கேள்விக்குச் செல்லுங்கள்.

14. ‘அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்’ என்று தொடங்கும் பாடல் எந்த தெய்வத்தை விவரிக்கிறது?

முருகப்பெருமான் என்றால் 4-ம் கேள்விக்கும் மன்மதன் என்றால் 9-ம் கேள்விக்கும்,

கிருஷ்ணர் என்றால் 11-ம் கேள்விக்குச் செல்லலாம்.

15. குதிரை முகமும், மனித உடலும் கொண்ட ஹயக்ரீவரை திருமாலின் வடிவமாகக் கருதி வழிபடுகிறார்கள். இவர் கல்வித் தெய்வம் என்று கருதப்படுகிறார்.

இந்த வார ஆன்மிகப் பயணம் இத்துடன் முடிந்தது.

அடுத்த வாரம், அடுத்த பயணம்.

Comments

Gowri says :

Awesome ... very innovative and informative. Exciting aamega payanam.

Chandra Mouli says :

Such quizzes are common in Readers` Digest magazine. தமிழுக்கு புதுசு.

Rsghavkumar says :

Very new and useful

Sujatha says :

Very interesting way of learning about temples and mythology.

Jayanti Sundar Rajan says :

Informative and Interesting !!! Enjoyed !

சுசீலா.மா. says :

ஆன்மீகப் பயணம் என்பது மிகவும் சரி.கேள்விகளூடே ஒவ்வொரு கோயில் தரிசனம்.இறை நாமம் உச்சரிப்பு.நிறைந்த ஆசிகள்.புதிய முயற்சி.வாழ்த்துக்கள்.

Selvi says :

’Take Diversion` method - ரொம்ப நல்லாவே இருந்தது.

அனுராதா சேகர் says :

சுவாரஸ்யமான புதிர்..ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. மூளை க்காரர் ஜி எஸ் எஸ்!!

Prabha says :

Interesting and useful

N Mohan says :

Very interesting. Looking forward for more such posts.

M.Kothandapani says :

புதிரில் இது புது முயற்சி.... இப்படி வாசகர்களை சுத்தலில் விட்டு பார்ப்பதில் ஜி.எஸ்.எஸ் அவர்களுக்கு சந்தோஷம்தான் போல......

G.Ravindran says :

Unique way to get the reader involved. Got to know many interesting facts about our Gods, sages, temples and religious places. Looking forward to more such quizzes !

மகாலட்சுமி சுப்பிரமணியன் says :

அருமையாக இருந்தது. புதிரோடு பல தகவல்களையும் தெரிந்து கொண்டோம். நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :