• TRENDING | பர பர

ரயிலில் சர்வ சாதாரணமாக பயணம் செய்யும் கால்நடைகள்! வைரல் வீடியோ!





சீனாவில் ரயில் பயணத்தில் ஒரு வித்தியாசமான காட்சி காணப்பட்டது. அது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், பொதுமக்கள் பயணிக்கும் பயணிகள் ரயில் செல்ல இருந்த நிலையில், அதில் அசால்டாக கால்நடைகள் மக்களுக்கிடையே புகுந்து நடந்து செல்லும் காட்சிதான் அது.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) என்ற யூ-டியூப் சேனலில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சீனாவின் பக்ஸியோங் என்ற இடத்திலிருந்து பன்ஜிஹுவா என்ற இடத்துக்குச் செல்வதற்காக செம்மறி ஆடுகள், பன்றிகள் என முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் குழுமியிருந்த ரயில் பெட்டிக்குள் ஏறி வந்தன. வழியில் நின்றுகொண்டிருக்கும் சில பயணிகளோ, கால்நடைகள் உள்ளே வருவதைக் கண்டு, அவை செல்வதற்கு வழிவிட்டனர். ஒரு சிலரோ, வெளியே வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் இருந்ததால், கால்நடைகள் ஏறுவதை கவனிக்கவில்லை.

இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’, இந்த காட்சியானது குறைந்த வேகத்தில் செல்லக்கூடியதும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுககு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் ரயிலில்தான் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த கால்நடைகள் விவசாயிகளால் சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறியுள்ளது.

இந்த 1 நிமிட வீடியோ இணையத்தில் வைரலாகி, ஆயிரக்கணக்கான நெட்டிசன்களிடமிருந்து பலவித சுவாரஸ்ய கமெண்ட்டுகளை பெற்று வருகின்றன. ஒரு சிலரோ, இந்த சம்பவம் போல், கால்நடை ரயிலில் மனிதர்களை ஏற்றினால் எப்படி இருக்கும் என வேடிக்கையாக கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

Youtube link : : https://www.youtube.com/watch?v=R4SMMDkSizQ

Comments

M.Kothandapani says :

கால்நடை ரயிலில் மனிதர்கள் ஏறுவதும் மனிதர்கள் ரயிலில் கால்நடைகள் ஏறுவதும் இரண்டும் ஒன்றுதானே.... இதில் வேடிக்கை என்ன இருக்கிறது/

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :