• JUST IN | சுட சுட

ஆக்சிஜன் தயாரிப்பு: அரசே ஆலையை நடத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு!





தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவதாக கூறி அந்த ஆலையைத் திறக்க அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்த்தில் மனு செய்தது வேதாந்தா நிர்வாகம்.

ஏன் அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து மக்களின் எதிர்ப்பை மீறி திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதிக்க மறுப்பது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி தலைமையில் இப்பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதன் முடிவில், ஸ்ட்ர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் தற்காலிகமாக 4 மாதங்கள் செய்லபட அனுமதிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி, ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமா என்று கருத்து கேட்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:

தமிழக அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலையை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம். நாங்களே நடத்தினால் தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவோம்

-இவ்வாறு ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது..

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவது தான் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் உண்மையான நோக்கம் என்றால், அரசே எடுத்து நடத்துவதை ஏன் அவசரமாக மறுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :