• தினம் ஒரு கஞ்சி

சேமியா, ரவா கஞ்சி

தேவை: பாம்பே ரவை + சேமியா - தலா 3 ஸ்பூன், இஞ்சித் துருவல் - சிறிது, பச்சை மிளகாய் கீறியது - 1, காயத்தூள், மல்லித்தழை, உப்பு - தேவைக்கு, ப்ரெட் ஸ்லைஸ் -1.

செய்முறை: சேமியா, ரவையை தனித் தனியே வெறும் வாணலியில் வறுக்கவும். 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து முதலில் ரவையையும், பின்பு சேமியாவையும் சேர்த்து கிளறி வெந்தவுடன் இறக்கவும். உப்பு, மல்லித்தழை, இஞ்சித்துருவல், காயத்தை, கஞ்சி சூட்டோடு இறக்கும்போது சேர்த்து கிளறி மூடி வைக்கவும். ப்ரெட் ஸ்லைஸை உதிர்த்து போட்டு, மோர் அல்லது தயிர் விட்டு கலக்கி சாப்பிடவும். நல்ல சத்தான காலை உணவு. மேலும் வெள்ளரித் துருவல், கேரட் துருவல் கலந்தால் சூப்பர் ருசி!

குறிப்பு: சேமியா, ரவையை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால் இன்ஸ்டண்ட் சேமியா ரவை கஞ்சி பொடி ரெடி. தேவையான தண்ணீரில் 1 ஸ்பூன் கலக்கி கொதிக்க வைத்து பால், நாட்டுச் சர்க்கரையுடனோ அல்லது உப்பு, மோர், காயத் தூள் கலந்தோ பருகலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :