• தினம் ஒரு கஞ்சி

அங்காயக் கஞ்சி

தேவை: சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், சுக்கங்காய் வற்றல்,

வேப்பம் பூ, தனியா, மிளகு, கட்டி காயம், - தலா 1 டீஸ்பூன், மோர் - 1 கப், இந்துப்பு - சிறிது, தாளிக்க - சீரகம், கறிவேப்பிலை, நெய் - சிறிது.

செய்முறை: வற்றல் வகைகள், வேப்பம் பூ, தனியா, மிளகு காயம் இவைகளை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். மோரில் 1 ஸ்பூன் பொடி சேர்த்து, இந்துப்பு போட்டு கலக்கவும். நெய்யில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து அருந்தவும்.

இன்னொறுமுறை: 1 கப் வெந்நீரில் இந்த வற்றல் பொடி போட்டு, கலக்கி, மூடி வைத்தால் 1 மணி நேரத்தில் தெளிந்துவிடும். பால் அல்லது தேங்காய் பால் அந்த தெளிவுடன் சேர்த்து சர்க்கரை சேர்த்தும் அருந்தலாம்.

குறிப்பு: வயிற்றுப்புண், செரிமான கோளாறு, வயிற்றுப் பூச்சி வெளியேற்றும் தன்மை, இவற்றுக்கு ஏற்றது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :