• தினம் ஒரு கஞ்சி

ஓட்ஸ் + பால் + பலவகை கஞ்சி

தேவை: ஓட்ஸ் - 1 கப், பால் - 3 கப், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு பொடித்தது - ¼ கப், ஏலத்தூள், ரோஸ் எசன்ஸ், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம், கொட்டை நீக்கிய பேரீச்சை 2, உலர் திராட்சை - 10 எல்லாம் கலந்தவை - 1 கப்.

செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். பாலுடன் சிறிது தண்ணீர் கலந்து ஓட்ஸை வேக வைத்து இறக்கவும். சர்க்கரை, பனங்கல்கண்டு பொடி சேர்த்து கலக்கி இறக்கி சற்று ஆறியபின் ஏலம், ரோஸ் எசன்ஸ், பலகலவை சேர்த்து கலக்கி சுவைக்கவும். குளிர்சாதன பெட்டியில் வைத்து, சற்று குளிர வைத்தும் பருகலாம்.

குறிப்பு: ஓட்ஸ் எளிதில் செரிக்கும். காலை உணவாக இந்த பழ கஞ்சியை எடுத்துக் கொண்டால், டயட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றதாக அமையும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :