• தினம் ஒரு கஞ்சி

அவல் கஞ்சி

தேவை: சன்ன அவல் - 1 கப், துருவிய வெல்லத்தூள் - ¼ கப், பால் - 3 கப், ஏலத்தூள், நெய் - சிறிது.

செய்முறை: வெறும் வாணலியில் அவலை வாசனை வரும்வரை வறுத்து ஆறியபின் மிக்சியில் பொடிக்கவும். அடிகனமான கடாயில் பாலைக் காய்ச்சவும். மிதமான தீயில் வைத்து அவல் தூளை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து, கட்டிதட்டாமல் கிளறி, அவல் சற்று வெந்தவுடன் வெல்லத்தூள் சேர்த்து நன்றாக கிளறி, வெல்லம் வாசனை போனவுடன் ஏலத்தூள், நெய்விட்டு கலந்து இறக்கி பரிமாறவும். அருந்தவும்.

குறிப்பு: வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை பருகலாம். அவல் ஊட்ட சத்து உள்ளது. எளிதில் ஜீரணமாகும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :