• தினம் ஒரு கஞ்சி

வெந்தயக் கஞ்சி

தேவை: வெந்தயம் - ¼ கப், புழுங்கலரிசி நொய் - 1 டீஸ்பூன், சற்று புளிப்பு மோர் - 1 கப், காயத்தூள், உப்பு, இஞ்சித் துருவல் - தேவைக்கேற்றபடி.

செய்முறை: வெந்தயத்தை நீர்விட்டு களைந்து முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். நொய்யை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு ஊறிய வெந்தையத்தையும் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். ஆறியவுடன் புளிப்பு மோர், காயம், உப்பு, இஞ்சித்துருவல் சேர்த்து கலக்கி பருகலாம். சற்று கசப்பு ருசியுடன் இருக்கும்.

குறிப்பு: நீரிழிவு, அல்சர், வயிற்று உபாதைகளுக்கு இந்த கஞ்சி ஏற்றது. பிரசவித்தவர்களுக்கு, காய்ச்சிய பாலுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து தரலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :