• தினம் ஒரு கஞ்சி

ஜவ்வரிசி கஞ்சி - உப்பு

தேவை: நைலான் ஜவ்வரிசி - ¼ கப், கடைந்த மோர் - 1 கப், கீறிய பச்சை மிளகாய் - 1, இஞ்சித் துருவல், மல்லித்தழை, கேரட் துருவல் - தலா 1 டீஸ்பூன், நெய் - 2 சொட்டு, உப்பு - தேவைக்கு.

செய்முறை: வெறும் வாணலியில் ஜவ்வரிசியை வறுத்து, மிக்சியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும். (2 கப் தண்ணீர்விட்டு) குக்கரில் வேக வைத்து எடுத்து, இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மல்லி, கேரட், உப்பு, மோர், நெய் சேர்த்து நன்கு மசித்து தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் சேர்த்து கலக்கி பரிமாறவும் - பருகவும்.

குறிப்பு: துருவிய வெள்ளரி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 டீஸ்பூன் சேர்க்கலாம். நாவிற்கும் ருசி. வயிற்றுக்கும் இதமளிக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :