• தினம் ஒரு கஞ்சி

ஹெல்த் டிரிங் ஜவ்வரிசி (இனிப்பு) + உப்பு

தேவை: ஜவ்வரிசி - ¾ கப், சர்க்கரை - ¼ கப், பால் - 1 கப், ஏலத்தூள், ஜாதிக்காய்தூள் - சிறிது, நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டு, பொரியும் வரை வறுக்கவும். மிக்ஸியில் அரைக்கவும். பொடித்த மாவு கலவையை கட்டியின்றி வெந்நீர் விட்டு கரைத்து, சர்க்கரை கலந்து கொதிக்க வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து பால், ஏலம், ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். ஆறியவுடன் இளம் சூட்டுடன் பருகலாம்.

குறிப்பு: இந்த கஞ்சி வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆற்றும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :