• தினம் ஒரு கஞ்சி

சிறு பருப்பு கஞ்சி

தேவை: சிறு பருப்பு (பாசிப்பருப்பு) - ¾ கப், அரிசி நொய் - 1 டீஸ்பூன், பால் - 1 கப், வெல்லம் பொடித்தது - ½ கப், ஏலத்தூள் - சிறிது, தண்ணீர் - 1½ கப்.

செய்முறை: வெறும் வாணலியில் அரிசி நொய்யையும், பருப்பையும் தனித்தனியே வறுத்து எடுத்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஊற விடவும். 1½ கப் தண்ணீரில் பொடித்த வெல்லத்தை போட்டு கரைத்து வடிகட்டவும். குக்கரில் ஊறிய தண்ணீரோடு பருப்பு, நொய்யை போட்டு, 3 விசில் வரும் வரை

கேவ விட்டு எடுக்கவும். வடி கட்டிய வெல்லத் தண்ணீரை வெந்த பருப்பு, நொய்யுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு சேர்ந்து கொதித்தவுடன், பால், ஏலத்தூள் சேர்த்து

மசித்து இறக்கவும்.

குறிப்பு: விரதத்துக்கு ஏற்றது இந்தக் கஞ்சி. இரவில் இந்த கஞ்சி அருந்தினால், வயிற்றுக்கும் நிறைவாக இருக்கும். மணம், ருசி, அதிகம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :