• தினம் ஒரு கஞ்சி

வரகு கஞ்சி

தேவை: வரகரிசி - ¼ கப், ஓமம், உப்பு - சிறிது, தண்ணீர் - 1 கப், மோர் - ½ கப், பால் - 1 கப், ஏலத்தூள் சிறிது, நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு தேவைக்கு, நெய் - 2 சொட்டு.

செய்முறை: வரகரிசியை லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊற விடவும். பின் கல் நீக்கி களைந்து, ஓமம் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4, 5 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும். ஆறியதும் மசித்து, உப்பு, மோர் சேர்த்து பருகவும். நெய் 2 சொட்டு சேர்த்தால் மனமாக இருக்கும்.

இனிப்பு வேண்டும் என்பவர்கள், ஓமம் சேர்க்காமல், வேகவைத்த அரிசியில் காய்ச்சியபால் 1 கப், ஏலத்தூள், பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகவும். நெய் 2 சொட்டு சேர்க்கவும்.

குறிப்பு: ஜீரணம் ஆவதற்கு உதவும். மஞ்சள் காமாலை போன்ற நோய் தாக்கியவர்களுக்கும், பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கும் இந்த கஞ்சி ஏற்றது.

Comments

Selvi says :

அருமையான பதிவு

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :