• JUST IN | சுட சுட

இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வீட்டிலிருந்தே ஆன்லைனில் பார்க்கலாம்!





மதுரை சித்திரைத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் பொதுவாக இந்த விழாவை காண இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக சென்ற ஆண்டு இந்த விழாவில் பங்குகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா 2-ம் அலை காரணமாக இந்த ஆண்டும் மதுரை சித்திரைத் திருவிழா கோவில் உள்பிரகாரத்திலேயே பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த விழாவின் ஒருபகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.நடத்தப்படும். இந்த திருவிழா தினத்தில் பக்தர்கள் பலர் கள்ளழகரைப்போல் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சவும், திரி எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றுவர். மேலும் இத்திருவிழாவின் 5-ம் நாளான இன்று (ஏப்ரல் 27) காலை 8 மணியளவில் ஆண்டாள் மாலை சாற்றுதல் நடைபெற்றது. பின்னர் கள்ளழகர் தங்கக்குதிரையில் ஆடி வீதியில் புறப்பாடு கண்டார்.

அந்த சமயத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதுபோல் வைகை ஆற்று படங்கள் பிளக்ஸ் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. தரையில் பாலித்தீன் விரிப்புகள் விரிக்கப்பட்டு அதில் தண்ணீர் விட்டு அழகர் ஆற்றில் இறங்குவது போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை கோவில் நிர்வாகம் சார்பில் இணையதளம் மூலம் பக்தர்கள் வீட்டில் இருந்த படியே கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் நேரடியாக அழகர் ஆற்றில் இறங்குவதை இந்த வருடமாவது காணலாம் என்று நினைத்திருந்த லட்சோபலட்சம் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :