• தினம் ஒரு கஞ்சி

உளுந்து கஞ்சி

தேவை: தோலுள்ள முழு உளுந்து - ½ தம்ளர், கைக்குத்தல் அரிசி - ½ தம்ளர், பூண்டு - 4 பல், உப்பு, மோர் - தேவைக்கு.

செய்முறை: அரிசியை களைந்த 2 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தையும் களைந்து ஊற வைக்கவும். குக்கரில் இரண்டையும் போட்டு, பூண்டு பல் சேர்த்து 5 தம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து மசித்து உப்பு, கலந்து மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கி, மோர் கலந்து குடிக்கவும். மோர் பிடிக்காவிட்டால், காய்ச்சி ஆறவைத்த பால் 1 கப், நாட்டுச் சர்க்கரை, சிறிது ஏலத்தூள் கலந்து பருகலாம்.

குறிப்பு: முதுகுவலி, உடல்வலிக்கு ஏற்றது. பருவமடைந்த பெண்களுக்கு எலும்பு வலுவடைய இந்த கஞ்சியைத் தருவார்கள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :