• TRENDING | பர பர

செடி வளரும் கண்ணாடிக்கூண்டு முகக்கவசம்: வித்தியாச நபர்!





பெல்ஜியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கொரோனாவைத் தடுக்க அணியும் கண்ணாடிக் கூண்டு முகக்கவசம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதன்மூலம் அவர் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சமூக ஆர்வலரான இவர், பெல்ஜியத்தின் தலைநகரான Brussels சாலை வீதிகளில், வித்தியாசமான கண்ணாடி கூண்டு முக கவசம் ஒன்றை வடிவமைத்து, அணிந்து செல்கிறார். PORTABLE OASIS என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தில், நறுமணத் தாவரங்களை வளர்க்கிறார்.இதனால் தனக்கு இயற்கையான காற்று கிடைப்பதாக கூறுகிறார்.

இந்த புதுவித முகக்கவசம் மூலம் காற்று மற்றும் ஒலி மாசுபாடு குறைவதுடன், மற்ற நபர்களூடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :