• JUST IN | சுட சுட

135 கோடி ரூபாய் இந்தியாவுக்கு நிதியுதவி: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு!





கொரோனா நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு, கூகுள் நிறுவனம் சார்பாக ரூ. 135 கோடி நிதியுதவி செய்ய உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா நெருக்கடிக்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

இதுகுறித்து சுந்தர் பிச்சை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோசமான கோவிட் நெருக்கடிக்கு நிவாரணமாக கூகுள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், யுனிசெஃப் மூலமாக மருத்துவப் பொருட்கள் வாங்க 135 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கிறது. அதிக ஆபத்துள்ள சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும், முக்கியமான தகவல்களை பரப்பவும் உதவி செய்வோம்.

-இவ்வாறு தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தன் டிவிட்டரில் தெரிவித்ததாவது:

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை மனதை உடைய வைத்துள்ளது. அமெரிக்க அரசு இந்தியாவுக்கு உதவ முன்வந்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன் . மைக்ரோசாப்ட் அதன் வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்கும், மிக முக்கியமான ஆக்ஸிஜன் சாதனங்களை வாங்குவதற்கும் தொடர்ந்து பயன்படுத்தும்.

-இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments

கதிர் says :

இவர் தமிழர்... தமிழ்நாட்டுக்கு மட்டும் கொடுத்திருக்கலாம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :