• TRENDING | பர பர

இரட்டை வேடத்தில் உருவாகும் ‘சர்தார்’! கார்த்தி கேரக்டர் அப்டேட்!





திரையரங்கில் நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ வெற்றிநடை போட்டுவரும் நிலையில், அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று மோஷன் போஸ்டருடன் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில், கார்த்தியின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

‘சர்தார்’ படத்தில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒன்று விஞ்ஞானி கேரக்டர் என்றும், இன்னொன்று போலீஸ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படம், இதுவரை தமிழில் வெளிவராத டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கிரைம் சப்ஜெக்ட் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி இதற்கு முன்னதாக, ‘சிறுத்தை’ மற்றும் ‘காஷ்மோரா` ஆகிய இரு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அடுத்து மூன்றாவதாக ‘சர்தார்’ திரைப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ள நிலையில், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கெனவே இரண்டு பாடல்களுக்கான கம்போஸிங் முடிந்துவிட்டதாகவும், இன்னும் சில பாடல்கள் மட்டும் கம்போஸ் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :