• TRENDING | பர பர

நாய்க்குட்டியை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டிய இன்னொரு நாய்! வைரல் வீடியோ!





நடந்து போகும்போது, திடீரென நீச்சல் குளத்தில் விழுந்த நாய்க்குட்டியை மற்றொரு நாய் காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு பொமேரியன் நாய்க்குட்டி நீச்சல் குளத்தின் அருகே செல்லும்போது, திடீரென கால் ஸ்லிப்பாகி நீச்சல் குளத்தில் விழுந்து வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது. இதைக் கண்ட ஒரு பெரிய நாய், முதலில் குரைத்தபடி, உதவிக்கு வேறு சிலரை அழைக்க முயன்றது. ஆனால் யாரும் வராததால், தானே அந்த நாய்க்குட்டியின் காதைக் கடித்து அதை வெளியே மெதுவாக இழுத்து, பின்னர் அதை தட்டிக் கொடுப்பது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோவை, முன்னாள் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரரான ரெக்ஸ் சாப்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/RexChapman/status/1384551197500137482

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :