• JUST IN | சுட சுட

இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்கள் அனுப்ப அமெரிக்கா வாக்குறுதி!





இந்தியாவில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசி மருந்து தயாரிப்பை துரிதப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்படி அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் அமெரிக்கா அந்த தடையை நீக்க மறுத்தது.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாககொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை வழங்க அமெரிக்க அர்சு ஒப்புகொண்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகிய இருவருக்கிடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உதவிகளை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.கிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :