• JUST IN | சுட சுட

மேற்கு வங்கத்தில் இன்று 7-ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!





மேற்கு வங்க மாநிலத்தில் 7-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை தீவிரமடிந்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் முர்ஷீதாபாத், மேற்கு வர்தமான் ஆகிய மாவட்டங்களில் தலா 9 தொகுதிகளும், தெற்கு தினாஜ்பூர், மால்டா ஆகிய மாவட்டங்களில் தலா 6 தொகுதிகளும், கொல்கத்தாவில் 4 தொகுதிகளும் என மொத்தம் 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :