• JUST IN | சுட சுட

காசோலை மோசடி வழக்கு: நடிகை சரிதா நாயர் கைது!





கேரளாவில் காசோலை மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் நடிகை சரிதா நாயரை கோழிக்கோடு போலீசார் கைது செய்தனர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சிக்கியவர் நடிகை சரிதா நாயர். இவர் கேரள முன்னாள் முதல்வரான உம்மன்சாண்டிமீது பாலியல் புகார் கூறியதன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்த சோலார் மோசடி வழக்கில் சரிதா நாயர் உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியும் சரிதா நாயர் ஆஜராகத்தால் கைது வாரண்ட் பிறப்பித்தது.

இதனையடுத்து கோழிக்கோடு போலீசார் திருவனந்தபுரத்திலுள்ள சரிதா நாயர் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். மேலும், சரிதா நாயரின் வர்த்தக பங்குதாரர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் டிரைவர் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :