• JUST IN | சுட சுட

அதிர்ச்சி! இந்திய விமானங்களுக்கு உலக நாடுகள் தடை!





கொரோனா 2-வது அலை இந்தியாவில் தீவிரமாக இருப்பதாகக் கூறி, உலகின் பல நாடுகள் இந்தியாவிற்கான தங்களது விமான சேவைகள் ரத்து செய்துள்ளன.

அதன்படி, இந்தியா - துபாய் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து விமானங்கள் வர கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் உள்ள கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அடுத்த 30 நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை முதல் ( ஏப்ரல் 24) முதல் 30-ம் தேதி வரை இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்களும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுடனான விமான போக்குவரத்தை மே 3-ம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளது. முன்னதாக அமெரிக்கா அவர்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்தது குறிப்பிடத் தக்கது.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை பரவத் தொடங்கிய போதே நியூசிலாந்து அரசு விமான சேவையை ரத்து செய்து விட்டது. பாகிஸ்தான் அரசு இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியா, ஓமன் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.

துபாய், அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஓமன், இங்கிலாந்து, பாகிஸ்தான் என பல நாடுகளும் இந்தியாவிலிருந்து விமானங்கள் வருவதற்கும், கப்பல் வழியே பயணிகள் தங்களது நாட்டுக்கு வருவதற்கும் தடை விதித்துள்ளன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :