• TRENDING | பர பர

பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை கரம்பிடித்த விஷ்ணு விஷால்!





நடிகர் விஷ்ணு விஷால் - பேட்மிண்டன் வீராங்கணை ஜுவாலா கட்டா இருவரின் திருமணம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன்பின் ‘முண்டாசுப்பட்டி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘ராட்சசன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவருமே 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதை உறுதிப்படுத்தினார்கள்.

சமீபத்தில் ‘காடன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ‘ஜுவாலா கட்டாவைத் திருமணம் செய்யவிருப்பதாக கூறியதோடு, நான் தெலுங்கு தேசத்து மருமகன் ஆகப் போகிறேன். இதை நினைத்து பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று பேசியிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 22ம் தேதியன்று இவர்களது திருமணம் ஐதராபாத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணச் சடங்குகள் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியான நிலையில், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தற்போது திருமணம் செய்துள்ள விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருக்குமே முதல் திருமணம் நடந்து, அது விவாகரத்தில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :