• JUST IN | சுட சுட

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: தெறிக்க விட்ட விராட் கோலி: பெங்களூரு அணிக்குமீண்டும் வெற்றி!





ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.

முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர். 178 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் மரண அடி அடித்தனர்.

இதனால், இருவரும் அரைசதம் விளாசினர். அதிலும் அதிரடியாக விளையாடிய படிக்கல் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த படிக்கல் 51 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி ரன்கள் 101* எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

அதேபோல கோலி 47பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 72* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :