• JUST IN | சுட சுட

புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு!





புதுச்சேரியில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது . இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழுஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்தது . மேலும் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 987 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் புதுச்சேரியில் 837 நபர்களுக்கும், காரைக்காலில் 89 நபர்களுக்கும், ஏனாமில் 40 நபர்களுக்கும், மாஹேவில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 5923 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 43,931 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் புதுச்சேரியில் 3 பேரும் காரைக்காலில் 1 நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மாநிலத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 726 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,580ஆக உள்ளது. முதன்முறையாக புதுச்சேரியில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் வெள்ளிகிழமை இரவு முதல் வார இறுதி நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :