• TRENDING | பர பர

வெயிலை விரட்ட கழுதையை பயன்படுத்தும் மக்கள்! வித்தியாச முயற்சி!





பொதுவாகவே உலகம் முழுவதும் வெப்பமயமாதல் அதிகமாகி வரும் வேளையில், வெயிலை விரட்ட கழுதையை பயன்படுத்திய பாகிஸ்தானிய கிராம மக்கள் குறித்த வீடியோ, நெட்டிசன்களால் கவரப்பட்டு வைரலாகி வருகிறது.

கோடைகாலம் வந்தாலே பல்வேறு நாடுகளிலும் வெயில் வாட்டி வதைக்கும். அதிலும் வறண்ட பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ பிரபலமாகி வருகிறது. பாகிஸ்தான் பாலைவனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில், இரு நபர்கள் சுடும் வெயிலில் ஒரு கட்டிலைப் போட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அருகே ‘T’ வடிவத்தில் கம்பு நடப்பட்டு, அதில் மேலே இருபக்கமும் ஈரப் போர்வைகள் கட்டப்பட்ட நிலையில், கீழே ஒரு கழுதையும் கட்டிவிட்டு அதை சுற்ற வைக்கின்றனர்.

இப்போது அதிலிருந்து ஃபேன் காற்று வீசுவதுபோல் ஒரு சுகம் கிடைக்க மக்களும் இனிமையாக அதில் காற்று வாங்கி ரிலாக்ஸாக அமர்ந்திருக்கின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களுடைய சுவாரஸ்யமான பதிவுகளை கமெண்ட்களாக பதிவிட்டு வருவது மட்டுமில்லாமல், வெயிலிலிருந்து தப்பிக்க ஒரு புதுமையான முயற்சியை மேற்கொள்வது போல், இந்த வீடியோ அமைந்துள்ளது.

twitter link : : https://twitter.com/rupin1992/status/1383982439807152135

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

பாவம் கழுதை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :