• TRENDING | பர பர

குச்சியில் கிதார் வாசித்த சிறுவர்கள்! வைரல் வீடியோ!





மூன்று சிறுவர்கள் இணைந்து குச்சியை கிதாராக நினைத்து பாடல் வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனைவருக்கும் பிடித்த மகிழ்ச்சியான காலம் என்றால் அது நாம் சிறுவயதாக இளமையாக இருக்கும் காலம்தான். அந்த வயதில் நாம் செய்யும் செயல்கள் நமக்குப் பிடித்ததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அனைவராலும் ரசிக்கும் படியாகவும் அமையும்.

அந்தவகையில், சிறுவர்களாகிய 3 பேர் கொண்ட குழு இணைந்து முழு உற்சாகத்துடன், ஒரு பாடலைப் பாடுவதோடு, அதற்கேற்றாற்போல் அதில் ஒரு சிறுவன் குச்சியை கிதாராக நினைத்து வாசிப்பது பார்ப்போரைக் கவர்ந்து வருவதோடு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீஷம் சிங் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி, இதை ட்விட்டரில் ‘இந்த வருடத்தின் மிகவும் விலையுயர்ந்த கிதார் கொண்ட இசைக்குழு’ என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அத்துடன் மகிழ்ச்சி என்பது உங்கள் அணுகுமுறையில்தான் உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

twitter link : : https://twitter.com/BhishamSinghIPS/status/1381524268089974790

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :