• JUST IN | சுட சுட

நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைப் சரிவு: போட்டி தளங்கள் சவால்!





வீடியோ ஸ்டீரீமிங் தளமான நெட்பிளிக்ஸை சப்ஸ்கிரைப் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் வீடியோ ஸ்டீரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் அபார வளர்ச்சியை சந்தித்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை சுமார் 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்ற நெட்பிளிக்ஸ், கடந்த 3 ஆண்டுகளில் இதுவே மிக குறைவான சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டில் முடங்கியிருந்த சமயத்தில் பலரும் வீடியோ கேம், தொலைக்காட்சி மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற சீரியஸ்களில் மூழ்கியிருந்தனர். இதனால், ஆன்லைன் வீடியோ ஸ்டீரீமிங் தளங்களை சப்ஸ்கிரைப் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

ஆனால், இப்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீடிப்பதால், நெட்பிளிக்ஸ் தளத்துக்கு புதிய சப்ஸ்கிரைப்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நெட்பிளிக்ஸ் டீம் மீளாய்வு செய்து வருகிறது. எதிர்பார்ப்புக்கு மேல் வருமானம் கிடைத்தாலும் முதலீட்டாளர்கள் கவலை கொண்டுள்ளனர். காரணம் பங்குச்சந்தையில் 8 விழுக்காட்டுக்கு மேல் நெட்பிளிக்ஸின் பங்கு குறைந்துள்ளது.

டிஸ்னி, ஆப்பிள் மற்றும் எச்.பி.ஓ போன்ற மற்ற வீடியோ தளங்களும் நெட்பிளிக்ஸூக்கு கடும் சவாலை கொடுத்துவருவது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை கணிசமாக பாதித்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் உலகளவில் 208 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் நெட்பிளிக்ஸ் முதல் இடத்தில் உள்ளது. மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் நெட்பிளிக்ஸ் கூறியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :