• JUST IN | சுட சுட

எல்லை தாண்டி வந்த புறா: விசாரணை நடவடிக்கை!





பஞ்சாபில் எல்லை பாதுகாப்புப் படையினர் ஒரு புறா மீது புகார் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ரோவாலா சோதனைச்சாவடியில் புறா ஒன்று பறந்து வந்து அச்சமயம் பணியிலிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் அமர்ந்தது. அந்த புறாவின் கழுத்தில் ஒரு குறிப்புச் சீட்டு கட்டப்பட்டு அதில் தொடர்பு எண்கள் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து அந்த பாதுகாப்புப் படைவீரர் அந்த புறாவைப் பிடித்து விசாரணை அதிகாரிகளீடம் ஒப்படைத்தார்.

அந்தப் புறா பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்ததால், புறாவை யாராவது அனுப்பியிருக்கலாமோ அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்தது.

பொதுவாகத் தீவிரவாதிகள் தங்கள் ரகசியங்களை பரிமாறிக்கொள்ள இதுபோன்று புறாவைத் தூது அனுப்புவது இப்போதும் நிகழும் சம்பவம்தான். அதனால், புறாவின் மீதான புகார் குறித்து தீவிரமாக எல்லை பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :