• JUST IN | சுட சுட

கொரோனா தடுப்பூசி: விரைவில் வருகிறது அடுத்த இந்திய தயாரிப்பு!





கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த "பயாலாஜிக்கல் இ " நிறுவனம் உருவாக்கி வருகிறது.

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், "பயாலாஜிக்கல் இ " என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. இதன் மூன்றாம் கட்ட பரிசோதனை விரைவில் தொடங்கவுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்தவுடன் அந்த தடுப்பூசிக்கான மத்திய அரசின் அனுமதி ஆகஸ்ட் மாதத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதுவரை பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷில்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரஷ்ய உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் "பயாலாஜிக்கல் இ " நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால் இந்தியாவில் இது 4-வது தடுப்பூசியாக இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :