• JUST IN | சுட சுட

22 லட்ச ருபாய் காரை விற்று ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் ’ஆக்ஸிஜன் மேன்’!





மும்பையை சேர்ந்த ஷானவாஸ் என்பவர், தனது 22 லட்ச ரூபாய் மதிப்பிலான ford endeavour காரை விற்று, ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு சப்ளை செய்து வருவதால், அப்பகுதி மக்கள் அவரை "ஆக்ஸிஜன் மேன்" என்று அழைத்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து, மருத்துவமனையில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள், ரெம்டெசிவிர் மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், மும்பையில் மொரோனா பாதிப்பு கார்ணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஷானவாஸ் என்பவர், சில நாட்களுக்கு முன்பு வாங்கிய தனது 22 லட்ச ரூபாய் மதிப்பிலான புத்தம்புது ஃபோர்டு காரை விற்று, ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்து வருகிறார். அப்பகுதி ஏழை மக்களுக்கு ஷானவாஸ் இலவசமாக ஆக்ஸிஜன் சேவைகளை வழங்கி வருகிறார். இதுவரை 160 ஆக்ஸிஜன் சிலிண்டரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஷானவாஸ் தெரிவித்ததாவது:

எனது உயிர் நண்பரின் மனைவி ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஆட்டோவிலே உயிரிழந்தது என்னை அதிர்ச்சி கொள்ள வைத்தது. அதன்பிறகுதான் காரை விற்கும் முடிவை எடுத்தேன். அந்த பணத்தைக் கொண்டு ஆக்ஸிஜன் சப்ளை செய்து வருகிறேன். இதற்காக கட்டுப்பாடு மையம் துவங்கினேன். ஜனவரி வரை ஒரு நாளுக்கு 50 அழைப்புகள் வந்த நிலையில், இப்போது நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 அழைப்புகள் வரை ஆக்ஸிஜன் கேட்டு வருகின்றன. என்னால் முடிந்தளவு சப்ளை செய்கிறேன்.

-இவ்வாறு ஷானவாஸ் கூறினார். இவரின் இந்த சேவையை பாராட்டி, மக்கள் அவரை "ஆக்ஸிஜன் மேன்" என்று அழைத்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :