• TRENDING | பர பர

ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து ரசிகர்களை மிரள வைத்த சாயிஷா!





கோலிவுட்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘வனமகன்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை சாயிஷா. தமிழில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’ உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் ‘கஜினிகாந்த்’ படப்பிடிப்பின்போது தான், இவருக்கும் ஆர்யாவுக்கு காதல் மலர்ந்தது. இருவரின் பெற்றோரும் காதலுக்கு ஓ.கே. சொல்ல இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுடன் சேர்ந்து ‘டெடி’ படத்திலும் நடித்திருந்த நிலையில் அப்படம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிப்போடு சேர்ந்து அருமையாக நடனமும் ஆடக்கூடிய சாயிஷா, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் ஆர்வமுள்ளவர். சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் சாயிஷா, தற்போது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் சாயிஷாவின் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கணவர் ஆர்யாவையே மிஞ்சிவிடுவார் போல என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Instagram Link : : https://www.instagram.com/p/CN4JrfrDHHn/?utm_source=ig_embed

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :