• TRENDING | பர பர

உண்மைக் காதலுக்கு எப்போதும் வயதில்லை! மனதை உருக்கும் வீடியோ!





உண்மை காதலுக்கு என்றும் வயசாகாது என்பதை உணர்த்தும் விதமாக, கணவரைப் பார்த்ததும் கட்டித் தழுவிய 89 வயதான மனைவியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷியர் பகுதியை சேர்ந்த 89 வயதான மேரி டேவிஸ் மற்றும் அவரது கணவர் கோர்டான் இருவரும் வெவ்வேறு நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்த போதிலும் அவர்களால் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது இருவருக்கும் மிகுந்த வேதனையை அளித்துவந்தது.

இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது மேரி டேவிஸ் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தின் அறையின் பக்கத்திலேயே ஒரு அறை காலியாக இருப்பதை அறிந்த கணவர் கோர்டான், அந்த அறைக்கு வந்து குடியேறி தனது மனைவி மேரி டேவிஸ்க்கு ஒரு மிகப்பெரிய ஆனந்த அதிர்ச்சியை கொடுக்க நினைத்துள்ளார்.

அதன்படி அவரும் குடியேற, எதேச்சையாக வெளியே வந்த மேரி டேவிஸ் தனது கணவரை அந்த அறையில் கண்டதும், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் துள்ளிக்குதித்து சந்தோஷத்தில் கோர்டானைக் கட்டிப்பிடித்து, முத்தங்களை பரிமாறி அன்பு மழை பொழிந்துள்ளார்.

உண்மைக் காதலுக்கு என்றுமே வயசாகாது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த வீடியோ, இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் மேலான லைக்ஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

twitter link : : https://twitter.com/RexChapman/status/1382374719358431233

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :