• JUST IN | சுட சுட

"மண்டேலா" பட சர்ச்சை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!





காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் ’’மண்டேலா’’ திரைப்படம் ஏப்ரல் 4-ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

இந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களைக் கழிவறையைக் கழுவச் செய்வது,முடி திருத்தும் தொழிலாளியைச் செருப்பால் அடிப்பது, காரின் பின்னே ஓடி வர சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதை எதிர்த்து, ‘மண்டேலா’ திரைப்படத்தை மறுதணீக்கை செய்யக் கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

அந்த மனுவில் குறிப்பிட்டதாவது

மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்ததாகும். காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

இந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களைக் கழிவறையைக் கழுவச் செய்வது, அவர்களை செருப்பால் அடிப்பது, காரின் பின்னே ஓடி வர சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனைத் தணிக்கைக் குழு தணிக்கை செய்ய தவறிவிட்டது. இந்தக் காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது எனவே இந்தப் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும்,. சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.

-இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அவர் இந்த புகார் மீது திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குநர் மடோன் அஸ்வின் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :