• JUST IN | சுட சுட

டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் இணையத்தில் பதிவேற்றம்!





தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் இணைய தளத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் முதன்முறையாக பதிவேற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடக்கும் முறைகேடு புகார்களை தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் விடுத்துள்ள அறிவிப்பு:

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக இப்போது இணையத் தளத்தில் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு புகாரை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இந்த புதிய சீர்திருத்தம் உடனடியாக அமல் படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இத்தேர்வு எழுதிய தேர்வர்கள், தங்களின் OTR கணக்கு மூலமாக, உரிய கட்டணத்தை செலுத்தி அவரவர் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :