• JUST IN | சுட சுட

108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம்! ராம்குமார் அதிரடி அறிவிப்பு!





நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி, இந்த வருடம் முதல் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கவிருப்பதாக நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்கள் தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் ஜூலை 21-ம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் இந்த வருடம் தொடங்கி இனி ஒவ்வொரு வருடமும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்க முடிவெடுத்துள்ளோம். அந்த வகையில் எங்களின் அன்னை இல்லம் சார்பில் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :