• TRENDING | பர பர

நமோ நமோ சங்கரா: பாலிவுட் சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய யானை! வைரல் வீடியோ!





பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற `நமோ நமோ சங்கரா` பாடலுக்கு யானை ஒன்று நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில், சாரா அலி கான் மற்றும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற ‘கேதார்நாத்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `நமோ நமோ சங்கரா` பாடலுக்கு யானை ஒன்று தனது உடலை அசைத்து நடனம் ஆடிய வீடியோ ஒன்று நெட்டிசன்களால் லைக் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

லட்சுமி என்ற பெயர் கொண்ட அந்த யானை, இந்த பாடலின் இசைக்கேற்றபடி தனது தலை, வால் பகுதிகளை அசைப்பதை வீடியோவில் காண முடிகிறது. கர்நாடகாவில் அமைந்துள்ள கொத்யாக கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லட்சுமியின் நடனத்தைக் கண்ட பலரும், யானையைப் புகழ்ந்து கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளதோடு, வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Instagram Link : : https://www.instagram.com/p/CNexZSJBgtG/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :