• JUST IN | சுட சுட

#WhatsappPink இந்த செயலியை பயன் படுத்த வேண்டாம்: சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை!





சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் பிங்க் வாட்ஸ்அப் செயலியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பயன்படுத்தினால் உங்களுடைய தகவல்கள் அனைத்தும் திருடப்படும் என்று கூறியுள்ளனர்.

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் வாட்ஸப் மூலம் தான் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றனர். இதனால் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் இணைப்புகளைப் பெற்று வருகின்றனர் அந்த வகையில் பச்சை நிறத்தில் உள்ள வாட்ஸ் அப் செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மற்ற நிறங்களில் உள்ள வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தினால் நீங்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்று பயனர்களை சைபர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் “பிங்க் வாட்ஸ்அப்” பதிவிறக்க இணைப்புடன் வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு வைரஸ் பரவுகிறது. #WhatsappPink என்ற பெயருடன் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். அப்படி ஒரு வேளை செய்தால் உங்கள் தொலைபேசியின் முழுமையான அணுகல் நீங்கள் இழக்க கூடும் என்று இணைய பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் சைபர் புலனாய்வு நிறுவனமான வாயேஜர் இன்ஃபோசெக் இயக்குனர் ஜிட்டன் ஜெயின் கருத்துப்படி, கூகிள் அல்லது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் கிடைப்பதைத் தவிர வேறு எந்த APK அல்லது மொபைல் பயன்பாட்டையும் ஒருபோதும் நிறுவ வேண்டாம் என்று பயனர்களுக்கு எச்சரித்துள்ளார். இதன் மூலம் அந்நபரின் போன் ஹேக் செய்யப்பட்டு தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :