• JUST IN | சுட சுட

எங்களால் ஒன்றும் செய்ய முடியாது: உதவி கோரிய இந்தியாவுக்கு மறுத்த அமெரிக்கா!





நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்கள் வழங்குவதற்கான தடையை நீக்குவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. இந்தியாவின் தேவைகளை அமெரிக்கா புரிந்து கொண்டாலும், தற்போதைக்கு அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாது என ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ​​பத்திரிகை செயலாளர் ஜெயின் பாஸ்கி நேரடியாக பதில் அளிக்காமல், இந்தியாவின் தேவைகள் எங்களுக்கு புரிகிறது என்று மட்டும் கூறினார்.

எனினும், கோவிட் -19 (COVID-19) நடவடிக்கைக் குழுவின் மூத்த ஆலோசகரும், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் அந்தோனி ஃபவுசி, இந்த நேரத்தில் இந்தியாவுக்கு அளிக்க எங்களிடம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலாவின் கோரிக்கை குறித்து டாக்டர் அந்தோணி ஃபவுசியிடம் கேட்கப்பட்டது.

இந்தியா தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில், மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான விதிகளை தளர்த்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பூனாவாலா கேட்டிருந்தார். இதற்கு டாக்டர் ஃபவுசி, `இந்த நேரத்தில் பூனாவாலாவின் கோரிக்கையை நிறைவேற்ற எங்களால் முடியாது` என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து அமெரிக்க அரசு தெர்வித்ததாவது:

அமெரிக்கா முதலில் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே, மற்ற நாடுகளுக்கு மூலப்பொருட்களை கொடுப்பது பற்றி யோசிக்கத் துவங்கும்

-இவ்வாறு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்தியுள்ளது. அங்கு ஜூலை 4 க்குள் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியா உட்பட பல நாடுகளில் தடுப்பூசிகளைத் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறீப்பிடத் தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :