• JUST IN | சுட சுட

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த நடிகை சமந்தா!





தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா, பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்த நிகழ்வு அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது பெற்றோர் மறைவுக்கு பின்னர் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்றுவதற்காக ஆட்டோ ஓட்டி வந்தார். அவரது வருமானத்தில்தான் அவரது ஏழு சகோதரிகள் படித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும்போது அறிந்து கொண்ட சமந்தா, அந்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்ததோடு தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார் சமந்தா. இந்த காரை ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தன் குடும்ப வாழ்வாதாரத்தை அப்பெண் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இப்பரிசை அளித்ததாக சமந்தா அறிவித்துள்ளார்.

சமந்தாவின் இந்த சர்ப்ரைஸ் பரிசு, அந்த பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் இச்செயல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :