• TRENDING | பர பர

கால்பந்து மைதானத்தில் சேட்டை செய்த பூனை!





கால்பந்து மைதானத்திற்குள் திடீரென பூனை புகுந்து வெளியேறாமல் அட்டகாசம் செய்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

துருக்கியில் உள்ளுர் கால்பந்து கிளப் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்று வந்த வேளையில், போட்டியின் நடுவே சிறிது நேரம் சிற்றுண்டி இடைவெளி விடப்பட்டது. இந்நிலையில் அந்த மைதானத்திற்குள் திடீரென ஒரு பூனை அனைவரையும் மீறி உள்ளே புகுந்தது.

சிற்றுண்டி இடைவெளி என்பதால் வீரர்கள் ஒரு பக்கம் சிற்றுண்டி சாப்பிட, மறுமுனையில் அந்த பூனையை விரட்ட ஒரு பணியாள் முயன்றுள்ளார். முதலில் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் அந்த பூனையை மைதானத்தை விட்டு வெளியேற்றி விட்டனர். இதனால் ஆட்டம் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.

twitter link : : https://twitter.com/Reuters/status/1382585731466489860

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :