• TRENDING | பர பர

துன்பங்களை மறக்கச் செய்த குழந்தையின் சைகை மொழி! வைரல் வீடியோ!





குழந்தை ஒன்று தனது காது கேட்காத தந்தைக்கு புரிய வேண்டும் என்பதற்காக தனக்குத் தெரிந்த சைகை மொழியில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இவ்வுலகில் யாருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், குழந்தைகளைப் பார்த்தாலே கவலைகளை மறந்து ரசனையுள்ளவர்களாக மாறிவிடுவார்கள். குழந்தைகளின் கோபம், சிரிப்பு, சேட்டைகள் என அனைத்து ரியாக்ஷனும் பார்ப்பதற்கே தனி அழகுதான். அந்த வகையில் ஒரு குழந்தை தனது காது கேட்காத தந்தையிடம் சைகை மொழியில் பேசும் அழகு பார்ப்போரைக் கவர்ந்து வருகிறது.

2 வயது பெண் குழந்தை, தனது தந்தைக்குப் பேசினால் கேட்காது என்பதைப் புரிந்துகொண்டு, தான் கேட்க விரும்பும் விஷயத்தை, தனக்குத் தெரிந்த சைகை மொழியில் அழகாக கேட்கிறது.

குழந்தையின் இந்த செயலைப் பார்த்து, குழந்தையின் தந்தையோ சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார். குழந்தையின் அன்புக்கு முன்னால் மொழி என்பது ஒன்றுமில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த வீடியோ.

சென்ற வருடம் பதிவு செய்யப்பட்ட வீடியோவாக இருந்தாலும், குழந்தையின் அழகிய செயல் அனைவரையும் கவர்ந்திழுக்க, தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Youtube link : : https://www.youtube.com/watch?v=GpOfOjSrQug

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :