• JUST IN | சுட சுட

இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறை அறிமுகம்!





தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வருகின்றன.

அந்த வகையில் இன்று முதல் தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் ஆகியவை இரவு 9 மணி வரை செயல்படும். சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. உள்ளூர், வெளியூர் பயணிகள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

இந்நிலையில் கடந்த முறையை போன்று டாஸ்மாக் கடைகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மதியம் 12 மணி வரை இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், இன்று முதல் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அதற்கு டோக்கன் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மது வாங்க எந்த நேரத்தில் வரவேண்டும் என்பது டோக்கனில் குறிப்பிட்டிருக்கும்.

டாஸ்மாக் கடைகளில், தனிமனித இடைவெளியை கடைபிடித்து, கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :